Monday, November 29, 2010

அடுத்தது என்ன? What Next? பார்ட் 5 (நிறைவு)



முன்னாடி பகுதியில இந்த மாயா மாதஜியோட வரலாறு, குறிக்கோளைப் பத்தி தெளிவா புரிஞ்சிகிட்டிருப்பீங்க...  இனி, வாங்க....என்னோட....

மாமனுசன் உருவாறது இயற்கையை ஒட்டின விஷயம்...அதனால நான் உங்களை அந்த ரூட்லேயே வரிசையா மைல்கல் கணக்கா நம்பர் போட்டு இட்டுகிட்டு போறேன்!

1 .  மொதல்ல, இந்த மேட்டர நேரம் கெடைக்கரப்பெல்லாம்  அப்பப்ப அசை போடனுமின்னு மனசுக்குள்ள ஒரு மூலையில எடம் போட்டு வையுங்க...தெனம் காலையில கண்ணாடி பாக்கிறப்ப, டக்குனு ஞாபகம் வருமில்ல?

2 .  இது வரை படிச்சு தெரிஞ்சிகிட்டது, அனுபவத்தில தெரிஞ்சிகிட்டது, சொந்தக்காரங்க புள்ளைங்க மூலமா  தெரிஞ்சிகிட்டதுன்னு உடல் உறுப்புகளோட சங்கட லிஸ்டு தயார் பண்ணுங்க...அந்த பார்டுங்க எப்படி மாறினா நல்லா இருக்கும்னு  யோசியுங்க... உங்களில வின்ஜானிங்க இருக்கீக, டாக்டருங்க இருக்கீக... வெள்ள கொட்டு மாட்டிகிட்டு டெட் பாடிய உத்து பாத்துகிட்டே படிக்கிற புள்ளைங்க இருக்கீக... அந்த அந்த பகுதியில அக்கம் பக்கம் இருக்கிறவங்க சின்ன குழு ஒன்னு ஆரம்பீங்க.... மீட்டிங் போட்டு கலந்து பேசி, புது மாதிரி உடல் உறுப்புகளை (கை தனியா, கால் தனியா... இப்படி) வரைபடமா போடுங்க...காரு, டிவி, பிரிட்ஜுன்னு பழைய மாடலுங்கள புதுசா மாத்த டிசைன் போடற மாதிரி...

3.  இப்ப நீங்க இருக்கிறது இன்டர்நெட்டு காலம்...உங்க கருத்த மத்தவங்களோட பரிமாறிக்கிறது ரொம்ப ரொம்ப சுலபமாயிடிச்சு... உங்களுக்கு  தெரிஞ்சவங்க உலகத்தில எங்க இருந்தாலும் அவக யோசனையை அப்பப்ப கேளுங்க..

4 .  எல்லா சின்ன குழுக்களும் மத்த குழுக்களோட அடிக்கடி டச் வச்சிக்கிட்டு, புது பார்ட்டுங்களோட வரைபடங்களில எதுங்க டாப்னு கண்டுகிட்டு, எல்லாருக்கும் பொதுவான 'தர வரிசை 10 ' பார்ட்டு லிஸ்டு போடுங்க!

5 .  இது மனுஷன் இன்னும் ஒசத்தியா வரனுமின்னு சைய்யிற காரியம்... சுயநலம் கெடயாது....ஜாதி, மதம், இனம், மொழின்னு பிரிச்சு பாக்க எடமே இல்லீங்க... அதனால, யார் சொல்லுறது கரீட்டுங்கறது முக்கியமில்ல, எது கரீட்டுங்கறதுதான் முக்கியம்...

6 .  அடுத்த பாயிண்ட்டுக்கு போவமா... நீங்க போடற புது ஷேப்பு உறுப்புங்க மனுஷ வடிவத்தில, எங்க எங்க பொருத்தின நல்லா இருக்குமின்னு யோசியுங்க...அமெரிக்கா விஞ்சானி பௌமிக் மனுஷ மூளை பெரிசாகுது, தலை பெரிச்சகுதுன்னு போன வாரம் மீடிங்க்ல சொன்னாரு... மறைஞ்ச விஞ்சான எழுத்தாளர் சுஜாதா ஒரு பத்திரிகை கேள்விக்கு "புவி சூடாகிறதால எதிர்கால மனுஷன் தோல்  தடியாயிடும்... ரெண்டு இதயம்  தோணலாம்"னு சொல்லியிருக்காரு... இதையெல்லாம் மனசில மிக்சு பண்ணி, மனுஷனோட வடிவம் எப்படி மாறும்னு (கொரங்கு எப்படி மனுஷனா மாறித்துன்னு தெரிஞ்சுகிட்ட  மாதிரி) கூட்டா முடிவு செய்யுங்க..  இதையும் தர வரிசை 10 செய்யுங்க....சின்னதா விளக்கமும் கொடுங்க...இப்படி மாமனுசன் வரைபடங்களை ரெடி பண்ணுங்க!

7 .  ஐடியா யாரு சொன்னாலும், நல்ல ஐடியாவான்னு பாருங்க... எல்லாரும், கூட்டா, ஒத்துமையா செயல்பட்டா, பத்து முழு மாமனிச வரைபடங்கள தயார் பண்றது கட்டாயம் சாத்தியம்... மனசு இருந்தா  மார்க்கம் உண்டுங்க!

8 . இளவட்டங்கள தட்டிகுடுத்து தாஜா   பண்ணி இந்த வேலையில நுழைச்சி விடனுங்க...இதை சீரியசா செய்யனூம்னு இல்லீங்க...மூளைக்கு வேலை குடுக்கிற, சவாலான விளையாட்டு விசயமா எடுத்துகிட்டு அவங்களும் கலந்துப்பாங்க...மனுஷ உடம்பு எப்படி வேலை செய்யுதுன்கிற அறிவு அவங்களுக்கு வளருமில்லியா?

9 . இது பைத்தியக்காரத்தனம்...தேவையே இல்லாத, நேரத்தை வீணடிக்கிற விசயம்னு மட்டும் யாராவ்து நெனைக்காதீங்க... டிவி பொட்டி முன்னாடி மணிக் கணக்கா ஒக்காந்து கிட்டு பாத்த விளம்பரங்களையே பாத்துகிட்டு, பாத்த காமெடி சீன்களையே பாத்துகிட்டு,
பாத்த சினிமாங்களையே பாத்துகிட்டு, சீரியல்ல பொண்ணுங்க பொண்ணுங்க கொடம் கொடமா கண்ணீர் விட்டு அழறதப் பாத்து கூட அழுவுங்கரீன்களே... அபப நானு குறுக்க ஸ்க்ரீன்ல தோணி 'இப்ப நீங்க செய்யிறது பைதிக்காரத்தனமில்லியா...ரொம்ப தேவையானதா.. நேரம் வீணா செலவாகலியா'ன்னு உங்களைப் பாத்து கேலி செஞ்சு, கைகொட்டி சிரிச்சு பேஜார் பண்ணிடுவேன்...கபர்தார்!

10 . இன்னொரு விஷயம்.. அரச மரத்தை சுத்தி வந்துட்டு அடி வயத்தை தொட்டுப் பாத்துகிட்ட கதையா 'எங்க லிஸ்டு ரெடி...மாமனுசன் ரெடியா?'ன்னு கேக்காதீங்க! நான் சொல்லிப் போட்டது பிள்ளையார் சுழி மாதிரி...நிதானமா போகணும்...அவசரக் கோலம் அள்ளித் தெளிச்ச மாதிரி இருக்ககூடாது...மாதக் கணக்கா வருஷக் கணக்கா தலைய ஒடச்சிகிட்டு  லிஸ்டு தயாரிக்கணும்..
... போடற லிஸ்டு அப்பப்ப மாறும்.... இந்த முயற்சி தலைமுறை தலைமுறையா தொடரும்....

11  இன்னும் தெளிவா சொல்லனும்னா, உங்க காலத்துக்கு பெறகு உங்க சந்ததிங்க இந்த முயற்சியை சங்கிலித் தொடர் மாதிரி செய்வாங்க... பசங்க எதிர் காலத்தில நல்லா இருக்கணும்னு சொத்து சேத்து குடுக்கிற  மாதிரி இந்த வேலையையும் அவங்களுக்கு போனசா குடுங்க!  உங்க அடித்தளம் ஸ்ட்ராங்கா இருக்கட்டும்...

12 . கடோசியான கட்டத்துக்கு இப்ப நுழையணும்... ஒட்டுமொத்த மனுஷ சமுதாயமும் கூட்டா முடிவெடுத்து டாப் டன் மாமனுஷ வரைபடங்களை தயாரிக்கிறப்பவும் சரி, தேவைப்பட்டப்ப அந்தப் படங்களை மாத்தறப்பவும் சரி... அப்படிப் பட்ட நிலையில கோடானு கோடி மக்களும் ஒரே எண்ணம் கொண்ட ஒரே மனுசன்கிற நிலைக்கு நான் கொண்டாந்துடறேன்!  "மாமனுசன் இப்படி உருவாகனும்"கிற ஏகோபித்த குரலோட உங்களை ஒரு மாபெரும் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வைப்பேன்...உங்க இந்த பரிசுத்தமான மெனக் கெடல் இறைவன் அல்லது இயற்கையோட கலந்து, உங்க உயிர் அணுக்களில தேவையான மாற்றம் நடக்க நான் வழி வகுப்பேன்... காலமும் நேரமும் கனிந்து வர்றப்ப கட்டாயம் மாமனுசன் பிறப்பான்.

'அடுத்தது என்ன'ன்னு கேள்வியை உங்க முன்னாடி வச்சு, அதை நீங்கதான் முடிவு செய்யப்போரீங்கன்னு இப்ப உங்களுக்குப் புரிய வச்சிட்டேன்.... எங்க ஆரம்பிச்சா எப்படி முடியும்னு 1 முதல்   12 வரை ஏணிப்படி கணக்கா வழியும் சொல்லிட்டேன்...

ஒண்ணா  இருக்கக் கத்துக்கணும், அந்த உண்மையை சொன்னா ஒதுக்கணும் பாட்ட மனசில வாங்கிட்டு, கீழே கொஞ்சம் பாருங்க:




மனுசன்கிற நிலையில தேர் இருக்கு....அத இழுக்க உங்களுக்கு உதவப் போற வடம் நானு....ஜோரா ஒத்துமையா எல்லோரும் தேர் இழுங்க....  மாமனுசன்கிற நிலைக்கு மனுசத் தேரை கொண்டாந்திடுவீங்க!  பெறகு என்ன... உரக்க ஒ போட்டு சொல்லுங்க:

ஊர் கூடித் தேர் இழுப்போம்  (இதாங்க என்னோட நாவலோட பேரு!)

சொல்லறதை சொல்லி முடிச்சிட்டேன்....செயல்ல இறங்க ஆரம்பீங்க... வரட்டா?

இனி உங்கள் எண்ணத்துடன் உலவப் போகும்
மாயா மாதாஜி

பட உதவி: arunachala-live.com
Feedback: nithyavaradants@rediffmail.com

Monday, November 22, 2010

அடுத்தது என்ன? What Next ? Part - 3



அடுத்தது என்ன?

இளவட்டங்க கையில்தான் எதிர்காலம் இருக்குன்னு வுங்களுக்குத் 
தெரியும்...அவங்க இந்த மேட்டர்ல என்ன சொல்லப்போராங்கங்கிறது ரொம்ப ரொம்ப முக்கியமில்லியா

ஆனா பாருங்க...அவங்க தனி ட்ராக்கில போறவங்க...sms பார்டிங்க! அவங்ககிட்ட போயி "அட விளையாட்டு பிள்ளைங்களா..நீங்க எதிர் காலத்தில ஷோக்கா மாறப் போறீங்க! தலை வுச்சியிலேந்து பாதம் வரைக்கும் மொகம், கண்ணுகாது, வாய்ஹார்ட்டுகைகாலுன்னு வேற தினுசில புது ஷேப்பில வரப்போறீங்க... அதைப் பத்தி தெரிஞ்சிக்க நீங்க முயற்சி பண்ணனுமில்லியா?", அப்படி இப்படின்னு பழைய பஞ்சாங்கம் கணக்கா வள வளன்னு சொன்னா, அவங்க படக்குன்னு பாட்டுக் கருவியை காதில சொருகிக் கிட்டு போயிகிட்டே இருப்பாங்க!

அதனால தான் அவங்களுக்காக ஸ்பெசல் தலைப்பு...விவேக் டயலாக்கை காப்பி அடிச்சு one-லைன் மெசேஜ்  

இப்படி இருக்கிற நான் ....எப்படி ஆவேன்?

இனி பாருங்க அவங்களை...மனுஷ வுடம்பை அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சிபோட்டு அலசப்போறாங்க!

அட...பரிணாம வளர்ச்சி பத்தி ஏற்கனேவே விஞ்சானிங்க, தத்துவ ஞானிங்கன்னு பேப்பர்ல நெறைய எழுதிட்டாங்க... புஸ்தகங்க போட்டுடாங்க....நெட்ல கொட்டி கெடக்குன்னு சொல்ல வாரீங்களா?  

படிச்சு தெரிஞ்சுகிட்டதோட, சராசரி மனுஷனா    வுங்க சொந்த அனுபவங்களை நெனச்சுப் பாருங்க...வுங்க வுடம்போட பாகங்களில சங்கடங்க இருந்திருக்கலாம்... அவிங்களை  வேற விதமா கடவுள் குடுத்தா நல்லா இருக்குமேன்னு மனசில பட்டிருக்கிலாம்... இத மாதிரி விஷயங்களை நீங்க எல்லோரும் பகிர்ந்துகிட்டா என்ன? 

இந்த ஐடியா எப்படி?  'நல்லா இருக்குன்னு மெதுவா இழுக்காதீங்க..வடிவேலு மாதிரி 'ஆமா..நல்லாத்தான் இருக்கு'ன்னு ஜோரா சொல்லிக்குங்க!

ஏற்கனவே மனுஷன் இப்படி யோசிச்சிகிட்டு இருக்கான்னு ஆதாரம் இருக்குங்க... அதில தமாஷா ரெண்டு: 

"கண்ணே... வுன் அழகைப் பருக எனக்கு இரண்டு கண்கள் போதாது" (வுங்க தாத்தா காலத்து கதைங்களில படிச்சிருப்பீங்க)

"இப்படி தறுதலைப் பிள்ளையை பெத்தமேன்னு தலையில அடிச்சுக்க ரெண்டு கை பத்தாது" ...பெத்தவங்க போலம்பறாங்களா இல்லியா! 

ஒரு கடி ஜோக்கு: 

டாக்டர்:  ஏம்மா...நான் மிருகங்களுக்கு வைத்தியம் பாக்கிற டாக்டர்...ஒன மாமியார் காதில ப்ராப்ளம்னா ஏன் கிட்ட ஏன் அழைசுகிட்டு வந்தீங்க?

பெண்:  நான் எவ்வளவு மெதுவா திட்டினாலும் என் மாமியார் காதில விழுது டாக்டர்... சந்தேகமே இல்லாம என் மாமியாருக்கு பாம்பு காதுதான்  "

சரி...இப்ப வுன்மைக் கதை ஒன்னை மனசை டச் பண்ணற மாதிரி சொல்றேன்: 

ஒரு இளம் தம்பதிங்க.. துரு துறுன்னு குழந்தை...ரயில் தண்டவாளத்தைத் தாண்டி போயிகிட்ட்ருக்காங்க... தண்டவாளம் நடுவில ஒரு காககா... கையில இருந்த பிஸ்கட்ட காக்காவுக்கு குடுக்க குழந்தை பின்னாடி தங்கிடிச்சு...

அடுத்த நிமிஷம்...வேகமா வந்த பாழாப் போன ரயில் குழந்தை மேல ஏறிடிச்சு...சந்தோஷமா இருந்த பெத்தவங்க கதறி அழறாங்க...அம்மா ஆண்டவனையே திட்டறா... எப்படீன்னு? "ஒன படைபபில ஓர வஞ்சனை பண்ணிட்டியே..கக்கா தப்பிக்க ரெக்கை குடுத்தே...என் குழந்தைக்கு என் குடுக்கலே?"

இப்படிதாங்க கும்பகோணம் தீ விபத்தில குழந்தைங்களை இழந்தவங்க, சுனாமியில சொந்தங்களை இழந்தவங்க படைச்சவனை சபிச்சிருப்பாங்க...

பிளாஷ் நியூஸா இன்னிக்கு டெக்கான் குரோனிகல் பேப்பர்ல 'மனுஷ மூளை பெருசா வளருது ...அவன் சூப்பர்  ஆளா வர்ற டைம் ரொம்ப தூரத்தில இல்லேன்னு ஹைடராபாத்ல ஒரு அமேரிக்கா சைன்டிஸ்ட் மணிலால் புமிக் பேசியிருக்காருன்னு  என் கதை ஆசிரியர் சொல்லறாரு... 

ஆக, மனுஷங்க இப்படிப்பட்ட விபத்து மாதிரி சங்கடங்களை எல்லோரும் லிஸ்டு போட ஆரம்பியுங்க.. நான் கொஞ்சம் ப்ரேக் வுடறேன்!

மாயா மாதாஜி 

nithyavaradants@rediffmail.com
பட உதவி: solarnavigator.net, mosalami.org

Friday, November 12, 2010

அடுத்தது என்ன ? What Next ? Part 2


 
எல்லாருக்கும் இப்ப புரிஞ்சிருக்கும்  ....  மனுசன்னா இயங்கிகிட்டே தேடிகிட்டே இருக்கணும்.... கண்ணுல படறதை எல்லாம் தன் தேவைக்கு உபயோகப் படர மாதிரி மாத்திக் கிட்டே இருக்கணும்.
 
ஜடப் பொருள அவன் எந்திரமா மாத்தி  இயங்க வைக்கிறான்.... அவன் கண்டுபிடிச்ச கம்ப்யுடர் மனுஷ மூளைக்கே சவால் விடுது.....  ராகெட் சந்திரன் செவ்வாஇன்னு சர்வ சாதரணமா போகுது...
இந்த ரோபோவ பாருங்க... இளவட்டம் மாதிரி பொண்ணுங்களை லவ் பண்ணுது!
 
இந்த ப்ளாக்கை எடுத்துக்குங்க..... மனுசங்க வுலகத்தில எந்த மூலையில இருந்தாலும் அவக மனசில புகுந்து யோசிக்க வைக்கிற என் வேலைய சுலபமாயிடிச்சே... அதுக்குதானே மெனக்கெட்டு என்னை படைச்சாரு இந்த கதாசிரியர்!
 
அந்த வேலை என்னன்னு இப்ப சொல்லிடறேன்......
 
மாறுதல் நடக்குதே... அது இயற்கைங்க... ஜடப் பொருளுங்களை மனுஷன் மாத்திற மாதிரி, அவனையும் மற்ற வுயிரினங்களையும் பரிணாம வளர்சியால இயற்கை மாத்துது....
 
குரங்கிலேந்து மனுஷன் வந்தான்னு டார்வின் சொன்னாரு நீங்க கேட்டுகிட்டீங்க.... மனுஷன்லேந்து யாரு வருவாங்க? 
 
பாத்தீங்களா.....இது வுங்களுக்கு எவ்வவளவு முக்கியமான விஷயம்!  ஆட்டை தோளில போட்டுக்கிட்டு ஊரெல்லாம் தேடின கதையா, மத்த விஷயங்களுக்கெல்லாம் மண்டைய போட்டு உடைச்சுகிறீங்க !
 
சரி... இப்பவாச்சும் கண்ணாடி முன்னாடி நின்னு பாத்து, பரிணாம வளர்ச்சி வுங்களை என்ன பண்ணப் போறதுன்னு யோசியுங்க... நான் மறுபடி வாரேன்...
 
மாயா மாதாஜி  

அடுத்தது என்ன ? WHAT NEXT ? பார்ட் 1


 
எல்லோரும் தங்களோட இஷ்ட கடவுள்களை கும்பிட்டுகுங்க...கடவுளை நம்பாதவங்க இயற்கையை வணங்குங்க .. பெறகு என்ன நெனசிகிட்டு ஒரு பொது விஷயத்தை அலச ரெடியா இருங்க.... அதுக்கு முன்னாடி....
 
என் பேரு மாயா...வயசு 22 .... வுடனே லவ் மேட்டரா? காதல் தோல்வியா? பஞ்சாயத்து பண்ணனுமா ஆளாளுக்கு பதபதைச்சு போயி கியூவில நிக்காதீங்க!  ஏன்னா , நான் ஒரு பொம்பளை சாமியாரு!  அதாவது இந்த ப்ளாக்  ஆரம்பிச்ச கதாசிரியர் எழுதின நாவல்ல நான் ஒரு பாத்திரம்... குறும்புகார வேலைக்கார பொண்ணா கதை முழுக்க இருக்க விட்டுட்டு,  கடோசியில மாயா மாதாஜின்னு மாத்தி, எனக்கு வுங்க சம்பந்தப்பட்ட ஒரு வேலையையும் குடுத்திருக்கார் இந்த ஆசிரியர். 
 
அடுத்ததா இந்த மாயா என்ன சொல்லப்போறான்னு கேக்கறீங்களா?  சொல்லிடறேன்....
 
ஆண்டவன் மனுஷனுக்கு ஆறறிவு குடுத்ததே அடுத்து என்ன செய்யனும்னு அவன்  நெனைக்கதான்.  குகையில வசிச்சு எலையை வுடுத்திகிட்டு வாழ ஆரம்பிச்சவன், இந்த வுலகத்தில  கெடைக்கற அத்தனை பொருள்களையும் வச்சு தன்னோட உபயோகத்துக்காக புதுசு புதுசா கண்டுபிடிச்சு, அப்பப்ப அதுங்கள ஷோக்கா மாத்திகிட்டு இருக்கான்...மரத்தால வீடுன்னு ஆரம்பிச்சு  இப்ப சலவைக்கல் பிளாட்!; சாவி குடுத்தா ஓடின கார் இப்ப குளுகுளு படகு கார்! பக்கத்தில  இருக்கவன் கிட்ட மட்டும்தான் பேசமுடியுமகிரதை கையடக்க செல்போன்ல உலகம் பூரா பேசற மாதிரி மாத்திட்டான்!
 
இப்படி எதை எதையோ கண்டுபிடிச்சு எப்படி எப்படியோ மாதிக்கிட்டுருகிற மனுஷன் எதையாவது விட்டு வச்சிருக்கானா?
 
யோசியுங்க..... நான் அப்புறம் எழுதறேன்.
 
மாயா மாதாஜி